Tuesday, October 14, 2008

உன் விழி ஓடையில் நான் கலந்தேன், உன் கண்ணில் விழும் என தவம் கிடந்தேன்


நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ, பருவ குயில் தவிக்கிறதே,
சிறகு இரண்டும் விரித்துவிட்டேன், இளமை அது தடுக்கிறதே
போன் மானே, என் யோகம்தான்
பெண் தானோ, சந்தேகம்தான்
என் தேவி
உன் விழி ஓடையில் நான் கலந்தேன், உன் கண்ணில் விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு, ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ, மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
கன்னத்தை எந்தன் விரல் தொடுமோ, என்றைக்கு அந்த சுகம் வருமோ ?
தள்ளாடும் பெண் மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா ..
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன் ? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை


நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

No comments: