Thursday, October 16, 2008

தேகம் விட்டு ரத்தம் போனாலும் , என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாதுஎன்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்று எந்தன் உயிரை கண்டேனே
காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே
தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது
கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது
காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்
என் நெஞ்சை விட்டு உன் நினைவு போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

No comments: