Thursday, October 23, 2008

ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம் , யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவன் வஞ்சம் , கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன் மங்கை


மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போக போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போக போக யாவும் வெட்கங்களே

ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
என் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

தாமரை பூவென்றான் காகித பூ ஆனான்
ராமனை போல் வந்தான் ராவணன் போல் ஆனான்
தாமரை பூவென்றான் காகித பூ ஆனான்
ராமனை போல் வந்தான் ராவணன் போல் ஆனான்

பண்பாடு இல்லாமல் பெண் பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவன் வஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன் மங்கை

வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண் உள்ளம் இப்பாவி செயல் கண்டு தாள்லாடுது
காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஓர் வண்ணம்
மாருது அவன் பாதை வாடுகிறாள் பாவை
பூ சூடி வந்தாலே புரியாமல் நின்றாலே இப்போது

ஆசையில் ஓர் நாளில் பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆணோமே சேயினை கண்டோமே
ஏன் இந்த சேய் என்று தாளாத
நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்ததில் போராடி
வேஷததை தொடர்வாளா வேதனை பெருவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாலே பூமாது

தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விதம் செல்வாளோ எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பணி மூட்டம் இப்போது
இந்திய தாய் நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது

No comments: