Monday, November 24, 2008

உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா ,வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள ,உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல


என்னை மானமுள்ளே பொண்ணுன்னு மதுரையிலே கேட்டாக
மன்னார்குடியில் கேட்டகாக மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தி ஓட வந்து சீமையிலே கேட்டாக
அந்த சிங்கபூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூரிலும் கேட்டாக
அதை எல்லாம் உன்னாலே வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேல ஆச பட்டு வந்தேன் முன்னால

கொண்ட முடி அழக பார்த்து கொயம்புதூரிலே கேட்டாக
நெத்தியிலே பொட்டை பார்த்து நெல்லூரிலெ கேட்டாக
ரெண்டு புருவ அழகை பார்த்தாக புது கோட்டையில் இவள கேட்டாக
கன்னழக பார்த்து பார்த்து கண்டமநூரில கேட்டாக
மூக்க்ழகை பார்த்து என்னை மூக்கையாகொட்டையிலே கேட்டாக
கோபமுள்ள பொண்ணுன்னு கொம்பையிலே கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு பன்னபுரதுல கேட்டாக
இத்தன பேரு சுத்தி வலைச்சும்
உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா

வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள
உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல
நல்ல வாட்டம் உள்ள ஆம்பள உன்னை மறக்க இவளுக்கு ஆகல
வாரி கட்ட தோலில் அணைச்சு வச்சிக்கோங்க வேற கேட்கல
மாறி நீங்க போநீங்கன்ன மனசு இப்போ ஆரள
ஒத்துழைக்க கூடாதா என்னை சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா
உள்ளதெல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவா சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா

No comments: