Saturday, November 1, 2008

என்னை கொல்வதா ? இளைய மன்மதா!இதற்கு பேர் காதல் என்பதா ?


சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே
துன்பமோ இன்பம் செய்யுதே
ஆளில்லாமலே பேச தோணுதே
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே
இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

ஒற்றை சிறகு கொண்டு சுற்றி பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தலிக்குதெ
தூங்கும் பொது விழித்து நான் விழித்த பின்னும் கனவு
வயசு என்னை வம்பு செய்யுதே
மாலை நேரம் வந்தால் என் மனதில் நாணம் இல்லையே
மார்பில் உள்ள ஆடை என் பேச்சை கேட்கவில்லை
இதய கூடையில் பூக்கள் நிறையுமா ?
இதற்கு பேர் காதல் என்பதா ?

மனசின் பள்ளம் தேடி புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையை கடக்குமோ?
கடலில் அலைகள் போல என் உடலில் அலைகள் தோன்றி
பூமி சுற்றி கொந்தளிக்குமோ ?
என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லையே
என்னை கொல்வதா ? இளைய மன்மதா!
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே
துன்பமோ இன்பம் செய்யுதே
ஆளில்லாமலே பேச தோணுதே
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே
இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

No comments: