Friday, November 28, 2008

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா?



உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?

ஏனோ நம் பொய் வார்த்தை தான்,
ஏன் அதில் உன் என் மௌனமே தான்,
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்!
மனதில் கனத்தைத் தந்தாய்!

ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா?
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

தீப் போல், தேன் போல் சலனமே தான்,
மதி என் நிம்மதி சிதையவே தான்,
நிழலை விட்டுச் சென்றாயே!
நினைவை வெட்டிச் சென்றாயே!

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா?
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?

2 comments:

Rafeeq said...

This is my favorite song.
Only today (04.11.2009) I have seen your blog. Really wonderful. Keep blogging.

இசை காதலி said...

Thank you :)