Sunday, March 1, 2009

இரு உள்ளங்களும் பூந்தேரில் மேல் ஏறி ஊர்வோலம் செல்லத்தான்


புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளி எடுக்க ....
கன்னம் எனும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளி எடுக்க...
தக் தக் தக் தக்
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக்கொள்ளும் மாதே மாதே
நெஞ்சம்மெல்லாம் ஜிகு ஜிகு ஜம் ஜம்

புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளி எடுக்க ....
கன்னம் எனும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளி எடுக்க...

மந்திரத்தை நான் பாட அந்தரத்தில் நீ ஆட
சொர்க்கம் தான் மிக பக்கம் தான்
முத்தளந்து நான் போட முக்கனியை நீ தேட
மெல்ல தான் இடை துள்ள தான்
வெப்பங்களும் தாளாமல் தெப்பகுளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
செங்கமலம் நோகாமல் அன்பு கரம் எங்க
சங்கமங்கள் தேனாக தித்திக்க
இன்ப கதை நீ பாதி நான் பாதி
நாள்தொறும் சொல்லத்தான்
இரு உள்ளங்களும் பூந்தேரில் மேல் ஏறி
ஊர்வோலம் செல்லத்தான்
ஜிகு ஜிகு ஜம் ஜம்

சொல்லியது மாளாது சொல்லி சொல்லி தீராது
நித்தம் தான் ஓரு பித்தம் தான்
பொற்கலசம் மேலாட பைன்கோடியும் போராட
அம்மம்மா உயிர் என்னம்மா
வெண்ணிலவு போல் இந்த பெண்ணிலவு தேய
வெட்கங்களை பார்க்காமல் கட்டி தழுவு
பள்ளியறை ராஜாங்கம் என்னவென்று தானே
நள்ளிரவில் நீயாக சொல்லித்தா
சொல்லிதர நான் கேட்டு பாய் போட்டு
தேன் பாட்டு கேட்கத்தான்
சுகம் அள்ளி தர எந்நாளும் வந்தாளே
என் கண்ணம்மா
ஜிகு ஜிகு ஜம் ஜம்


கன்னம் எனும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளி எடுக்க...
தக் தக் தக் தக்
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளி எடுக்க ....

கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக்கொள்ளும் மாதே மாதே
நெஞ்சம்மெல்லாம் ஜிகு ஜிகு ஜம் ஜம்

No comments: