Saturday, March 28, 2009

கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனே அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே ஏ ஹே தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓ ஹோ தொட்டவ நீயடி

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை

ஐயாரெட்டு நெல்லப்போல அவசரமா சமைஞ்ச
ஐத்த மகன் மஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்ச
குட்டிப்போட்ட பூனை போல காலச் சுத்தி கொழஞ்ச
பாவமின்னு நீவி விட்டா பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நாந்தானே தொட்டுப்பாக்க கூடதா
கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்த பூ ஓ ஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை

கம்மாக்குள்ள ஒத்தமரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிடுவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன் நீயும் கொஞ்சம் வா மா
அங்கே இங்கே கை படும் சொல்லிப்புட்டேன் ஆமா
நிலா கறையை அழிஞ்சாலும் உன்ன திருத்த முடியது
பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடயாது
போகப்போக மாமனுக்கு புத்தி மாறுது
அள்ளவா கிள்ளவா ஓ ஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒஹ் ஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே ஹே ஹே உங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஹோ ஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன எண்ணி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

No comments: