Tuesday, February 10, 2009

மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு



குச்சி கருவாடு....
குச்சி கருவாடு..... கொழம்புக்கு நல்லது
ஒத்த பானக்கள்ளு ஒடம்புக்கு நல்லது
பச்சை வெங்காயம் பலத்துக்கு நல்லது
கொஞ்சலாமா

ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது
முத்து முத்துக் கண்ணு முத்தத்துக்கு நல்லது
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா

நெஞ்சோடு கூதலடிச்சா
ஏ மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது
குத்தால வாடையடிச்சா
ஒன் உள்ளங்கையில் தீ மூட்டும் வெப்பம் நல்லது

மோட்சங்கள் காணவும் முன்னேறி செல்லவும்
இல்லாத ஆடை நல்லதே
மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு
ஹே...

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு (குச்சி)



ஹே ராவு காலத்தில் குத்த வச்சவ
நீ வாழை தண்டையே பத்த வச்சவ

போன மாசந்தான் நான் பூ முடிஞ்சவ
உன்னை கண்டதும் பூ உடைஞ்சவ

சில்லென்னு பின்னிக் கொள்ள சிங்காரம் பண்ணிக் கொள்ள
சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா

முந்தானை விட்டு தந்த முத்தம் நீ கத்து தந்தா
என்னை நீ ரெண்டில் ஒண்ணு பண்ணமாட்டியா

வைகாசி பிறையே வைகை நதி கரையே மச்சான வச்சுக்கிறியா ஹேய்

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு

மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு (குச்சி)



நண்டு பெருத்தா வலையில் தங்குமா
என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ள தாங்குமா

பெட்டை கோழியே வண்டு கற்பழிக்குமா
கட்டு சேவலும் சும்மா கண்ணுரங்குமா

ஐய்யோ உன் நரம்பென்ன எப்போவும் தேடுமென்ன
கண்ணாலே பத்த வைப்பேன் சிக்கி முக்கிய

ஐய்யோ உன் அழகென்ன நெய் வாழை கொழை என்ன
அங்கங்கே மொழம் போட வச்சிருக்கியே

இச்சு ஒண்ணு கொடுத்து அச்சொண்ணு பதிச்சு நச்சுன்னு காதலிப்பியா

மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு (குச்சி)

No comments: