Thursday, February 26, 2009

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்


என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம்சுவாசக்காற்று தேவையா
(என்ன இதுவோ..)

No comments: