Tuesday, February 24, 2009

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்



விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தஉறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

No comments: