Tuesday, February 24, 2009

உனக்காக வழி பாக்கும் என்னோட மூச்சு சத்தம் உன் பேரை சொல்லித்தான் என் வீட்டு கேவிலி கத்தும்


பார்த்து போ மாமா ...பார்த்து போ ....
கருவேலம் காட்டுக்குள்ளே காதல் ஜோடி முத்த சத்தம்
காத்தால புதருக்குள்ளே கரிச்சான் குருவி கத்தும் சத்தம்
ஜிலு ஜிலு ஜிலு சலங்க சத்தம்
செம்மறி ஆட்டு கூட்டத்திலே
ஜல ஜல ஜல சலங்க சத்தம்
செவல காளை ஓடுதுங்க
கல்லுப்பட்டி டவுனு புச்சு கட கட நு வரும் சத்தம்
கிழக்கால ரயிலு வண்டி தடா தடா நு ஓடும் சத்தம்
உனக்காக வழி பாக்கும் என்னோட மூச்சு சத்தம்
உன் பேரை சொல்லித்தான் என் வீட்டு கேவிலி கத்தும்
பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

கோடை விரிக்கும் தென்னை மரத்தில
சல சலக்கும் ஓலை சத்தம்
கிளி பறக்கும் ஆல மரத்தில
சல சலக்கும் சருகு சத்தம்
குடிகார போதை சாமி ..
ஒ ஒ ஒ
குடிகார போதை சாமி .. மெட்டுக்கட்டி பாடும் சத்தம்
கம்மாயில் தண்ணியிலே கரட்டாண்டி ஓடும் சத்தும்
பொங்கலோ பொங்கலோ பாடுதுங்க
குமரி பொண்ணுங்க வளையல் சத்தம்
அங்கிட்டு இங்கிட்டு பார்காதிங்க
அப்புறம் கேட்கும் சண்டை சத்தம்
உன் காதில் எப்போதும் கேட்கின்ற என் பேச்சு சத்தம்
உன் பாதம் பார்த்து தான் என்னோட கொலுசு சத்தம்
பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

சாமி வந்து ஆடும் பொண்ணுக்கு மலையேற உடுக்க சத்தம்
சுத்தி சுத்தி ஒரே எடத்துல செக்குமாடு சுத்தும் சத்தம்
பலவீட்டு துணி வாங்கி படித்துறையில் துவைக்கும் சத்தம்
புழுதி காட்டில் உழுதுபுட்டு புகை கிளப்பும் டிராக்டர் சத்தம்
நாத்து நாடும் பொண்ணுங்கெல்லாம் சேர்ந்து பாடும் கொலவ சத்தம்
காத்து மட்டும் வருகுதுங்க குழாய் அடியிலே கோப சத்தம்
உன்னோடு இதயத்தில என்னோட துடிப்பு சத்தம்
கொலுசெல்லாம் போதுமுங்க எப்போதும் மெட்டு சத்தம்

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

No comments: