Tuesday, February 24, 2009

வீட்டில் நான் வாழ்கையில் உந்தன் ஞாபகம்


சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும் தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
கை விரல்கள் தீண்டாமல் கண்களால் தீண்டுகிறாய்
தீண்டுவதை தீண்டி விட்டு திரிகளையும் தூண்டுகிறாய்
ஆசை கண்ணே பூஜை பெண்ணே
வகுப்பறை முடியட்டும்
பள்ளியறை தொடங்கட்டும்
பூவே.. பூவே..


மார்பிலே பூசவே மஞ்சள் கேட்கிறாய்
தங்கத்தை தேய்த்து நான் நெஞ்சில் பூசவா
மெத்தை இட்டு அணைக்கவும் மத்த கலை படிக்கவும்
வெத்தலையும் பாக்கும் இருக்கா
பாக்கு வைக்கும் காலம் வரை பாக்கி வைக்க நேரம் இல்லை
நோக்கும் அந்த நோக்கம் இருக்கா
முயற்சி செய்கிறேன் ஓரு முத்தம் போதுமா
துளசி தீர்த்தத்தில் என் தாகம் தீருமா

சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..


வா வா பக்கம் என் ஏஞ்சலே
நான் உன்னை வச்சு பாட்வேன் ஊஞ்சலே
நீ ஒத்துக்கிட்டா போகலாம் சென்றலே

வீட்டில் நான் வாழ்கையில் உந்தன் ஞாபகம்
உன்னை நான் பார்த்தும் வீட்டின் ஞாபகம்
சொந்த பந்தம் இருக்கட்டும் சொர்க்க வாசல் திறக்கட்டும்
பக்தனுக்கு வரம் தர வா
கோவில் வழி திறக்குமுன் கொள்ளை வழி வருகிறாய்
அத்து மீறல் பிழை அல்லவா
காதல் தேசத்தில் பிழை எதுவும் பிழை இல்லை
கடலில் கலந்த பின் அட என் பேர் நதியில்லை

பூவே.. பூவே..

சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
கை விரல்கள் தீண்டாமல் கண்களால் தீண்டுகிறாய்
தீண்டுவதை தீண்டி விட்டு திரிகளையும் தூண்டுகிறாய்
ஆசை கண்ணே பூஜை பெண்ணே
வகுப்பறை முடியட்டும்
........
சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
பூவே.. பூவே..

No comments: