Thursday, February 26, 2009

ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவருதான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான்
அழகு மன்னவரு மன்னவருதான்

(ஆடியில சேதி சொல்லி)

சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

(சேலை மேல)

வீரப் பாண்டித் தேருப் போல பேரெடுத்த சிங்கம்தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பூவுக் கூட நாரு போல பூமி கூட நீருப் போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரவீரன் பொம்மி போல

(பூவுக் கூட)

சேலையோட நூலுப் போல சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

No comments: