Saturday, February 28, 2009

எது அடிச்சு எது பெய்ஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

சுத்தித்திரிஞ்ச பூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுபுட்டே
அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன
ம் எட்டிப்போறதென்ன
அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ

வெயிலும் அடிச்சு மழையும் பெய்ஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம்
எது அடிச்சு எது பெய்ஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம்
எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம்

நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா
சொத்தவால மீனு சுலபத்தில் சிக்குமா
பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா
விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால்
குத்தம் சொல்வதென்ன
கொத்த வருவதென்ன

கல்லில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில கண் திறப்பு
எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு

உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு
எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு

கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது
சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது
வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது
குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது
அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது
சுத்தித்திரிஞ்ச பூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுபுட்டே
அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது .........

அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ

No comments: