Monday, September 22, 2008

உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்


தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே

இருபக்கம் எரிகின்ற மெழுகாய் ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும்முன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வலிக்கின்ற சுகம் காதல் தான்

தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே


அழகிய முகம் பளிச்சென நிறம்
அது என்னை கவர்ந்தது மிக கொஞ்சமே
உலகத்தில் உள்ள அத்தனை பொன்னும்
உன்னுடய குணம் ஆகி என்னை கொல்லுதே
பார்க்கும் யாருக்கும் பிடிக்கும் உன்னை
உன்னை போல் ஒரு ஜென்மம் அபூர்வம்
உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்
பித்தாகி போனேன் பித்தாகி போனேன்

தோகை விரிதொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே

எங்கே வந்தேன் எதற்கு உனை கண்டேன்
நமக்குள்ளே முடிச்சுகள் முடிந்தவை தான்
சுற்றம் தரும் சூழ்நிலை தரும்
இனி எந்த தடைகளும் தகர்ந்தவை தான்
நூறு பெண்களை நீயும் ஏற்றால்
நூரில் ஒன்றென நானும் வாழ்வேனே
இந்த பிறவியில் உன்னை சேரும் நாள் வரை வாழ்வேன்
இல்லையேல் சாவேன்.. இல்லையேல் சாவேன்..

தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே

இருபக்கம் எரிகின்ற மெழுகாய்
ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும் முன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வலிக்கின்ற சுகம் காதல் தான்
தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே

No comments: