Monday, September 22, 2008

கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்

கரிசல்காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா?
கவிதை பேசும் பெண்ணே என் அவனை கண்டாயா ?
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

ஓ ஓ ஓ
ஒரு முறை பார்த்தால் உயிர் வரை வேர்ப்பேன்
அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே
ஓ ஓ ஓ
அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால்
அரை டஜன் பிள்ளை பெற்று கையில் தருவேனே
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்
அய்யோ சந்தன நிறமோ பிடிக்கும்
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்

என் அவனுக்கு மட்டும் என்னை வளர்த்தேன் ஏழு வளர்ந்தாச்சே
அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்தேனே

தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு
உன் கை வளை ஒலி அவன் காதினில் கேட்கும் மை விழி பெண்ணே காத்திரு

ஓ ஓ ஓ
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என காத்திருந்தேன்
ஓ ஓ ஓ
அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம்
புது புது கோலம் போட்டு வைப்பேன்

என் தாவணி வயதுகள் போச்சே ஒரு ஆயிரம் வளர் பிறை ஆச்சே
அந்த ராட்சசன் ஏன் வரவில்லை என் பூக்குடை சாய்ந்திட வில்லை
என் இருபது போகும் எழுபது ஆகும்
அவனை விட மாட்டேன்
என் மடியில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும்
அழகை நான் பார்ப்பேன்

No comments: