Monday, September 22, 2008

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்


மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீரை சிந்தி சிதறி போகின்றோம் அன்பே
பிரிவு என்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடிவோம்

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்ட உன் மேன்மையை காதலித்தேன்
நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெத்தி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்
கண்ணா சில நான் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்?
காதல் நீர் கொஞ்சம் மெஹம் ஆனால் காதலா வற்றி விடும்?
வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம்
நிச்சயம் வசந்தம் வரும்


அன்பே அன்பே உன்னை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் எறிந்திருப்பேன்
உன்னை எண்ணி என் உயிர்த்தளம் உறைந்திருப்பேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்ததரிப்பேன்
அன்பே அன்பே உன்னை எங்ஙனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம்பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணை இருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்
இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
என் தான் அவனை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்ட சாலை
மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீரை சிந்தி சிதறி போகின்றோம் அன்பே
பிரிவு என்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒரு நாள் மெஹம் ஆகி
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடிவோம்

No comments: