Monday, September 22, 2008

உதடோ உந்தன் பெயர் சொன்னது உலகோ தினம் பழி சொன்னது




அழகா கல்லழகா ஆசை வச்சேன் கண்ணழகா
அழகா கல்லழகா ஆசை வச்சேன் கண்ணழகா
ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய் உனக்கழகா
தன்னால் வரைந்தேனே அட அது தான் அழகா
கண்ணால் அறிந்தேனே அட இது தான் அழகா
கெண்டை விழி கெஞ்சும் படி தண்டைகலும்
அஞ்சும் படி துடிப்பது எனக்கழகா


விடி வெள்ளியில் விடியும் வரை இருள் வெள்ளமும் வடியும் வரை
தினம் தினம் விழித்திருந்தேன் எந்தன் தூக்கம் எறிதிருந்தேன்
ஒரு நாள் இங்கு வருவாய் என திரு நாள் ஒன்று தருவாய் என
உயிர் சுமை பொருத்திருந்தேன் இந்த ஊன் ஊர் வெறுத்திருந்தேன்
ஆரெல்லாம் தண்ணீர் போனாலும் எந்தன் கூடமோ நிறையவில்லை
என் வீடு வாசல் வந்தாலும் தாண்டி சென்றேன் புரியவில்லை
மலர் கோர்த்திடும் மென் ஊசிகள் உன்னால் என் விரல் கோர்த்திடும்
அதில் வழி அறிந்ததில்லை

****அழகா கல்லழகா ஆசை வச்சேன் கண்ணழகா ****
உதடோ உந்தன் பெயர் சொன்னது உலகோ தினம் பழி சொன்னது
ஊர் எங்கும் சிரிக்க வைத்தாய் இன்று ஊர் பழி துடைத்துவிட்டாய்
உடல் என்பது நான் கொண்டது உயிர் என்பது நீ கொண்டது
வந்து எனை எழுப்பி விட்டாய் எந்தன் வாழ்வை ஆசையவைத்தாய்
கண்டேனே காதல் கொண்டேனே எந்தன் கால்கள் நிலத்தில் இல்லை
இடை தொட்டாடும் வண்ண பட்டாடை எந்தன் பேச்சை கேட்கவில்லை
கண்ணன் என் மொழியானது பெண்ணில் இரு விழியானது
இனி அது பிரிவதில்லை


அழகா கல்லழகா ஆசை வச்சேன் கண்ணழகா
அழகா கல்லழகா ஆசை வச்சேன் கண்ணழகா
ஒரு ஜென்மம் தவிக்க விட்டாய் உனக்கழகா
தன்னால் வரைந்தேனே அட அது தான் அழகா
கண்ணால் அறிந்தேனே அட இது தான் அழகா
கெண்டை விழி கெஞ்சும் படி தண்டைகலும் அஞ்சும் படி
துடிப்பது எனக்கழகா

No comments: