Monday, September 22, 2008

கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி ? கொடுத்த கடவுள் சதிகாரன் தான்


சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன்,
மனது எங்கும் காயங்களால்,
கல் அடிகள் தாங்கிய கள்ளி செடி போலவே
அழுகிறேன், சோகங்களால்,
வளர்ந்ததும் வெட்ட, ஒரு நகமல்ல காதல்,
இதய குழல்தானடா,
இதயத்தை தூக்கி, இந்த கல்யாண நாளில்,
பரிசாய் கொடுத்தேன் அடா,
தினம்தோரும் என்னை வதைத்த,
கனவே சென்று வா, கவிதைகள் மட்டும் தா,


எண்ணி ஈரெட்டு ஆண்டுகள் கழித்துதான்,
எந்தன் இமைகள் திருட்டு போனது,
அதையே மீட்க வந்தேன் இங்கே,
வந்த இடத்தில் எனது உயிரும்தான்,
கண்கள் அறிய களவு போகுதே,
இதை நான் எங்கே சொல்வேன், அன்பே?
பகல் விளக்காக மின்னும் அழகான பூவே,
சோகங்கள் வேண்டாம், இனி சுகம் தானடி,
பல காலம், உயிர்மேலே, நீ மனம் வீசவே,
மனத்தால் நான் வாழ்ததூவேன்,

தன் கை விட்டு போகிற பூவினை,
எண்ணி காம்புகள் அழுத சோகத்தை,
சொல்ல வார்த்தை கிடையாது தான்,
சொந்த காதலி பிரியும் வேளையில்,
கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி,
கொடுத்த கடவுள் சதிகாரன் தான்,
மணமகளான என் பிரியமான தோழி,
நீ உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன்,
உயிர் தேடும் இளம் பூவே, இந்த வைபோகமெ,
சிலையை தாலாட்டாவா?

No comments: